Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போட்காஸ்ட் நிகழ்ச்சிக்கான தேதியை நிர்ணயிக்கும்படி ராபிஜிக்கு நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

போட்காஸ்ட் நிகழ்ச்சிக்கான தேதியை நிர்ணயிக்கும்படி ராபிஜிக்கு நினைவுறுத்து

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கருத்துகளைப் பெற, Yang Bakar Menteri எனும் பெயரிலான போட்காஸ்ட் நிகழ்ச்சியை, பொருளாதார அமைச்சர் ராபிஜி ராம்லி நடத்துவது எப்போது? என சமூக ஊடக பிரபலமான லிம் சியான் சீ கேள்வியெழுப்பியுள்ளார்.

ரமலான் மாதத்திற்கு பிறகு, அந்நிகழ்ச்சி நடத்தப்படும் என ராபிஜி இதற்கு முன்பு கூறியிருந்தார். தற்போது, நோன்பு பெருநாளும் முடிந்துவிட்டது. இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ அந்நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென தாம் கூறவில்லை. குறைந்தபட்சம் அதற்கான தேதியையாவது அவர் நிர்ணயிக்க வேண்டுமென தாம் கேட்டுக்கொள்வதாக, லிம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, Lim, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி, அம்னோ தகவல் பிரிவு முன்னாள் தலைவர் இஷாம் ஜலீல் ஆகியோரை போட்காஸ்ட் நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக அழைக்கவிருப்பதாக, ராபிஜி கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி கூறியிருந்தார்.

1MDB விவகாரத்தில் அதற்கு ஆதரவாக பரப்புரை செய்தவர்களின் முகங்களை அடையாளம் காட்ட போவதாகவும் அதற்கு முன்பாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ சாஹித் ஹமிடி ஆகியோரிடம் அனுமதி கோரப்படும் என RAFIZI குறிப்பிட்டிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்