கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தம்மை தன்மூப்பான முறையில் வேலை நீக்கம் செய்து அநீதி இழைத்து இருப்பதாக கூறி கடந்த 15 ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த பாதுகாவலர் ஒருவருக்கு இறுதியில் நீதிக் கிடைத்துள்ளது.
எல். சுப்பிரமணியம் என்ற அந்த பாதுகாவலருக்கு 66 ஆயிரம் வெள்ளியை இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி அமெரிக்கத் தூதரகத்திற்குக் கோலாலம்பூர் தொழிலியல் நீதிமன்றத் தலைவர் அம்ரிக் சிங் உத்தரவிட்டுள்ளார். எல். சுப்பிரமணியத்தின் பணி நீக்கத்திற்கு அவர் தவறு இழைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுதற்கு அமெரிக்கத் தூதரகம் தவறிவிட்டது என்று அம்ரிக் சிங் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் தூதரகத் சட்டத்தின் கீழ் அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ள சிறப்பு சலுகை, தனது முன்னாள் தொழிலாளர் ஒருவர் நீக்கப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்த முடியாது என்பதையும் தொழிலியல் நீதிமன்றத் தலைவர் தமது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


