Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சகோதரிக்கு அச்சுறுத்தலை விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சகோதரிக்கு அச்சுறுத்தலை விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 15-

தனது உடன் பிறந்த சகோதரியை இரும்பு மற்றும் கண்ணாடியை கொண்டு தாக்குவதை போன்று அச்சுறுத்தலை விளைவித்ததாக ஆடவர் ஒருவர் கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

40 வயது ஹஸ்லிமி ஹாசன் என்கிற அவ்வாடவர் மாஜிஸ்திரேட் அஹ்மத் சியாபிக் ஐசாட் நஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு மொழிப்பெயர்ப்பாளர் மூலம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 3 மணியளவில் கோத்தா பாரு, கம்போங் தொக் டக்காங், ஜாலான் லோரோங் குபூர் பங்க்கொல்-கில் உள்ள தனது வீட்டில் 30 வயதுடைய சகோதரியை இரும்பு மற்றும் கண்ணாடியை கொண்டு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்