Jul 28, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரை கைது செய்யும் நோக்கம் இப்போதைக்கு இல்லை
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரை கைது செய்யும் நோக்கம் இப்போதைக்கு இல்லை

Share:

சொத்துக்கள் அறிவிக்கும் விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை கைது செய்யும் நோக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், இப்போதைக்கு கொண்டிருக்கவில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

துன் மகாதீருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காரணத்தினால், இப்போதைக்கு அவரை கைது செய்யும் நோக்கத்தை எஸ்.பி.ஆர்.எம் கொண்டிருக்கவில்லை என்று ஆசம் பாக்கி விளக்கினார்.

இன்று புத்ராஜெயாவில் 2024 முதல் 2028 ஆம் ஆண்டுக்கான தேசிய லஞ்ச ஒழிப்பு வியூக நடைமுறை திட்டத்தை தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆசம் பாக்கி மேற்கண்டவாறு கூறினார்.

சொத்துக்கள் அறிவிக்கும் விவகாரத்தில் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நபர்களில் துன் மகாதீரும் ஒருவர் என்ற கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஆசம் பாக்கி அறிவித்தது தொடர்பில் அவரின் மேலும் விவரங்கள் கோரிய போது மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்