Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பொதுமக்கள் வழங்கிய நன்கொடையில் மோசடி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொதுமக்கள் வழங்கிய நன்கொடையில் மோசடி

ஷா ஆலாம், ஜூன்.16-

பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை மோசடி செய்ததாக ஓர் அரசாங்கச் சார்பற்ற அமைப்பான என்ஜிஓவின் நடவடிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த என்ஜிஓவின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஓர் அமைப்பின் நிதி வள அதிகாரி உட்பட ஐவரைக் கைது செய்தது மூலம் அந்த இயக்கத்தின் ஊழல் நடவடிக்கையை எஸ்பிஆர்எம் வெளிக் கொணர்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் கடந்த வாரம், சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் வழங்கியதாகக் கூறப்படும் 26 மில்லியன் ரிங்கிட் நிதியை இவர்கள் கபளிகரம் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பொதுமக்கள் வழங்கிய நன்கொடையில் மோசடி | Thisaigal News