May 22, 2026
Thisaigal NewsYouTube
சூதாட்ட மையமாக மாறிய காபி ஹவுஸ்
தற்போதைய செய்திகள்

சூதாட்ட மையமாக மாறிய காபி ஹவுஸ்

Share:

சிரம்பான், மே 24-

கண்கவரக்கூடிய வடிவமைப்புகள் மற்றும் அலங்காரங்களுடன் நிறுவப்பட்ட ஒரு காபி ஹவுஸ் -க்கு பின்புறத்தில் ஆறு வளாகங்கள் ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மாலை சிரம்பானை சுற்றியுள்ள பிரதான பகுதிகளில் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் போலீசார் உட்பட தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் மேற்கொண்ட Ops Pemotongan Khas திடீர் சோதனையின் போது இந்நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

முன்னதாக, சில இடங்களில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட வளாகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் அவ்வளாகங்கள் மீண்டும் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது ஹட்டா சே தின் தெரிவித்தார்.

இச்சோதனையில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வளாகங்களுக்கு எதிரான பயன்பாடுகளை துண்டிக்கவும் முடக்கவும் காவல்துறையுடன் ஒன்றிணைந்து TNB பங்காற்றுவதாக முகமது ஹட்டா இன்று அறிவித்திருந்தார்.

Related News