Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விமான மரியாதை அணிவகுப்பு
தற்போதைய செய்திகள்

விமான மரியாதை அணிவகுப்பு

Share:

அரச மலேசிய கடற்படையின் விமான சாகச மரியாதை அணிவகுப்பு எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெறும் என்று கடற்படை தளபதி லக்சமணா டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் அயோப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லுமூட்டில் நடைபெற்ற அரச மலேசிய கடற்படையின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட ஒத்திகை நிகழ்வில் பத்து வீரர்கள் உயிரிழந்ததற்கு காரணமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான முழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தளபதி அப்துல் ரஹ்மான் அயோப் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

விமான மரியாதை அணிவகுப்பு ரத்து செய்யப்படாது. மாறாக, பாதுகாப்பு அம்சங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்த விமான சாகச மரியாதை அணிவகுப்பு தொடர்ந்து நடைபெறும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

Related News