Mar 24, 2026
Thisaigal NewsYouTube
உறவுக்கார தந்தை கொலை; ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

உறவுக்கார தந்தை கொலை; ஆடவர் கைது

Share:

கூச்சிங், ஜூன் 04-

சரவாக், கூச்சிங், கம்போங் ஹாஜி பாக்கி-யில் உறவுக்கார தந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவரைப் போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்றிரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் 55 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இரவு மணி 8.30 வாக்கில் சம்பந்தப்பட்ட ஆடவரை, சம்பவ இடத்திற்கு அருகாமையிலுள்ள பகுதியில் போலீஸ் கைது செய்தது.

முன்னதாக, அவ்விரு நபர்களிடையே ஏற்பட்ட கருத்துமோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், கடும் சினமடைந்த அவ்வாடவர், அவரது உறவுக்கார தந்தையை, கத்திரிக்கோலைக் கொண்டு நெஞ்சுப் பகுதியில் குத்தியதாக கூறப்படுகின்றது.

தற்போது, கொலை அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வரும் போலீஸ், அவ்வாடவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் இன்று கோரவுள்ளது.

Related News