Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மது போதையில் மனைவிற்கு தீ வைத்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

மது போதையில் மனைவிற்கு தீ வைத்த ஆடவர்

Share:

சூக், கம்போங் தினகலன் - னில் மது போதையில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் ஆத்திரமடைந்து தீ வைத்து எரித்ததால் அப்பெண் உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை இரவில் ஏற்பட்ட இத்தீவிபத்தில் 16 மணிநேரம் கழித்து தீக்காயங்களுக்கு ஆளாகிய 41 வயதுடைய அப்பெண் Keningau மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்துள்ளார்.

தீ சம்பவத்தின் போது அத்தம்பதியர்களின் 16 வயதுடைய மகள் தம் சகோதரர்களை தீயில் சிக்காமல் பாதுகாப்பாக வெளியேற்றினார் என்று தெரியவந்துள்ளது.

தம் மனைவியை கொலை புரிந்த குற்றத்திற்காக 50 வயதுடைய ஆடவரை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News