Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பாலமுருகன் குடும்பத்திற்கு 3 லட்சம் வெள்ளிக்கு மேல் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

பாலமுருகன் குடும்பத்திற்கு 3 லட்சம் வெள்ளிக்கு மேல் இழப்பீடு

Share:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் மரணம் அடைந்த 44 வயது எஸ். பாலமுருகன் குடும்பத்திற்கு 3 லட்சத்து 38 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்கும்படி போலீஸ்துறைக்கும், அரசாங்கத்திற்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலமுருகனை தவறாக தடுத்து வைத்திருந்தது, அவரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றுக்கு போலீசாரும், அரசாங்கமும் தார்மீக பொறுப்பேற்று இந்த இழப்பீட்டுத் தொகையை அவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சு தியாங் ஜூ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அளித்து தீர்ப்புக்கு ஏற்ப இந்த இழப்பீட்டுத் தொகையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

பாலமுருகனின் மரணத்திற்கு போலீசாரும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி அவரின் குடும்பத்தினர் தொடுத்திருந்த சிவில் வழக்கை விசாரணை செய்த சு தியாங் ஜூ, தடுப்புக்காவலில் மரணம் அடைந்த பாலமுருகனின் உடலில் 20 க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டாக குறிப்பிட்டார்.

இவ்வழக்கில் பாலமுருகனின் மனைவி நாத்தனன் யூச்சோம்சுக் மற்றும் உறவினர் எஸ்.பால்ராஜ் சார்பில் வழக்கறிஞர் ஜெய்த் மாலேக் ஆஜராகினர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து