வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பு, இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய 927 வாக்காளர்கள், தங்களின் ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்புக்காக கெம்பாஸ் போலீஸ் நிலையத்திலும், தம்போய் கடற் போலீஸ் பிரிவின் விலாயா டுவா ஆகிய இரு இடங்களிலும் வாக்களிப்பு மையங்களை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது.
இரு வாக்களிப்பு மையங்களும் காலை 8 மணிக்க ஏகக்காலத்தில் திறக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு பின்னர் மாலை 5 மணி வரையில் இந்த வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.








