Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆக்ககரமாக செயலாற்றவில்லை
தற்போதைய செய்திகள்

ஆக்ககரமாக செயலாற்றவில்லை

Share:

ஒற்றுமை அரசாங்கம் ஆக்ககரமாக செயல்படவில்லை என்ற மூடா கட்சியின் தவைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் இன்று குற்றஞ்சாட்டினார். இதற்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் அளித்த வாக்குறுதி கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, புதிய மாற்றங்களை செய்ய வேண்டும், அதனை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்று தேர்தலுக்கு முன் பக்காத்தான் ஹராப்பான் முன்வைத்த வாக்குதிகளை அந்த கூட்டணி நிறைவேற்றவில்லை என்று மூவார் எம்.பி.யான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.

லஞ்சத்தை துடைத்தொழிப்பதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என வேறுபாடுயின்றி அவரவர் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் முன்வைத்த பரிந்துரை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சையிட் சாடிக் மேலும் கூறினார்.

Related News