May 22, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது

Share:

விமான நிலையத்தில் அந்நியத் தொழிலாளர்கள் வருகை பன்மடங்காக அதிகரிக்கலாம்

மலேசியாவில் வேலை செய்வதற்கு அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்கு முதலாளிமார்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்து இருந்த காலக்கெடு இன்று மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நியத் தொழிலாளர்களின் வருகை பல மடங்காக அதிகரிக்கும் என்று மலேசிய குடிநுழைவுத்துறை எதிர்பார்க்கிறது.

ஜுன் முதல் தேதிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருப்பதால் அதிகமானோர் மலேசியாவை வந்தடைப்பதற்கான சாத்தியம் இருப்பதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.

பலதரப்பட்ட விமான நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி நாளை மே 31 ஆம் தேதி கோலாலம்பூரை வந்தடையும் அனைத்து விமானங்களிலும் அந்நியத் தொழிலாளர்களே நிரம்பியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ரஸ்லின் ஜூசோ குறிப்பிட்டுள்ளார்.

அந்நியத் தொழிலாளர்களின் வருகை அதிகமாக இருப்பதால் விமான நிறுவனங்களும் தங்கள் சேவையை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஒவ்வொரு நாளும் 500 முதல் ஆயிரம் அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே கோலாலம்பூர் வந்தடைந்தனர்.

இம்மாதம் முற்பகுதியிலிருந்து இந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,500 பேராக அதிகரித்து, கடந்த மே 27 ஆம் தேதிக்கு பிறகு 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 வரை அதிகரித்த நிலையில், காலக்கெடு முடிவடையும் கடைசி தினமான நாளை மே 31 ஆம் தேதி இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரஸ்லின் ஜூசோ குறிப்பிட்டார்.

Related News