Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மறுவாழ்வு சிகிச்சைக்கு வந்தவரை அடித்து காயப்படுத்தியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மறுவாழ்வு சிகிச்சைக்கு வந்தவரை அடித்து காயப்படுத்தியதாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

செரம்பான், ஏப்ரல் 30-

மறுவாழ்வு சிகிச்சைக்கு வந்தவரை அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட தனியார் போதைப்பித்த மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் இரண்டு ஊழியர்கள் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.

அந்த மறுவாழ்வு மையத்தின் மேற்பார்வையாளரான 48 வயது எம். ஜேசன் ஜெய் கணேஷ் மற்றும் உதவியாளரான 26 வயது கெல்வின் ரேய்மண்ட் ஆகிய இருவரும் நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஸிமுன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர்கள் தங்களுக்கு எதிரான அக்குற்றத்தை மறுத்தனர்.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி காலை 11 மணியளவில் நிலாய், லெங்கெங்கில் உள்ள போதைப்பித்த மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் நிர்வாக பிரிவு அலுவலகத்தில் PVC குழாயை பயன்படுத்தி 38 வயது மறுவாழ்வு சிகிச்சையாளரை அடித்து கடுங்காயத்தை விளைவித்ததாக அவ்விருவரும் கூட்டாக குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்