Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காதலர்களிடையே தகராறு காரணமாக கார் மோதப்பட்டது
தற்போதைய செய்திகள்

காதலர்களிடையே தகராறு காரணமாக கார் மோதப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 26-

பிரிக்பில்ட்ஸ்-சில் உள்ள வீடொன்றில் சத்தம் போட்டு சண்டையிட்டு கொண்ட காதலர்களின் செயலினால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் நோக்கத்துடன் அவர்களின் காரை மோதி தள்ளியதாக கூறப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாதிக்கப்பட்ட 40 வயதுடைய ஆடவரிடமிருந்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக Brickfields மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் க்கு மஷாரிமான் க்கு மஹ்மூத் தெரிவித்தார்.

முன்னதாக, அவ்வாடவருக்கும் அவரின் காதலிக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டை ஏற்பட்டதாகவும், பின்பு அவர்கள் கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய போது சந்தேகிக்கும் 35 வயதுடைய அந்நபர் கோபமடைந்து அவர்களின் காரை வேண்டுமென்றே மோதியதாகவும் க்கு மஷாரிமான் க்கு மஹ்மூத் கூறினார்.

இதை தொடர்ந்து சந்தேகிக்கும் அந்நபர் கைது செய்யப்பட்டதுடன் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் விவரித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சந்தேகிக்கும் அந்நபர் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக க்கு மஷாரிமான் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்