Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரு சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
தற்போதைய செய்திகள்

இரு சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து

Share:

மேரு, ஏப்ரல் 29-

சிலாங்கூர், தாமான் பெரின்டாஸ்துரியான் மேரு -வில் நிகழ்ந்த தீ விபத்தில் இரு சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எரிந்து சாம்பலாகின.

இன்று காலை 6.34 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, காப்பார், வடக்கு கிள்ளான், அன்டலாஸ் உட்பட மேலும் ஐந்து தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 39 தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

சம்பவ இடத்தை வந்தடைந்த போது தீ வேகமாக மற்ற கட்டிடங்களிலும் பரவி இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அஹ்மத் முக்லிஸ் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்