May 22, 2026
Thisaigal NewsYouTube
இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
தற்போதைய செய்திகள்

இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

Share:

ஜோகூர், ஜூன் 12-

BMW 3 சீரிஸ்- லோரி ஆகிய இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்றிரவு 8.15 அளவில் ஜோகூர், பாகோ அருகே, தெற்கு நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 123.6ஆவது கிலோமீட்டரில் அந்த விபத்து நிகழ்ந்தது.

இரவு மணி 8.23 அளவில், அவசர அழைப்பை பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த பாகோ தீயணைப்பு மீட்பு நிலையத்தின் 6 உறுப்பினர்கள், BMW ரக வாகனத்தில் சிக்குண்டிருந்த நால்வரை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வந்தனர்.

அவர்களில், வியட்நாமைச் சேர்ந்த இரு பெண்களும் உள்நாட்டை சேர்ந்த ஓர் ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மற்றொரு வியட்நாமிய பெண் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலங்கள் அனைத்தும் மேல்கட்ட நடவடிக்கைக்காக போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News