Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பெர்சத்து கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெர்சத்து கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமனம்

பெர்சத்து கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் அறிவித்துள்ளார்.

உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி, கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவது குறித்து அவருடன் மனம்விட்டு பேசியதாகவும், அவரும் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் முகைதீன் குறிப்பிட்டார்.

நிர்வாகத்திறனிலும், லஞ்ச ஊழலை முழுமையாக வேரறுக்கும் போராட்டதிலும், பெர்சத்து கட்சியை ஒரு முன்னுதாரமாக கொண்டு வருவதற்கு தாம் முழு வீச்சில் பாடுபட்டு வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவருமான முகைதீன் தெரிவித்தார்.

அஸ்மின் அலி, தற்போது சிலாங்கூர் மாநில பெர்சத்து கட்சித் தலைவராக இருந்து வருகிறார். கட்சியின் பொதுச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்பட்டு இருப்பது தீர்க்கமான முடிவாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →