Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்தனர்
தற்போதைய செய்திகள்

மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்தனர்

Share:

பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரில் பணியாற்றும் ஜோகூர்வாசிகள் வாக்களிப்பதற்காகவே இன்று பூலாய் வந்து சேர்ந்தனர்.

பூலாய் தொகுதியில் காலையில் பல்வேறு பகுதிகளில் கடும் மழைய பெய்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்த வண்ணம் வரிசையில் காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றதை காண முடிந்தது.

சிங்கப்பூரில் எஃகு தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை செய்வதாக கூறும் 57 வயது சி. தமிழ் என்பவர், இன்று பிற்பகல் 2 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கியதாக குறிப்பிட்டார்.

பூலாய் தொகுதியில் தாமான் புக்கிட் இண்டா வில் உள்ள இடைநிலைப்பள்ளியில் வாக்களித்த தமிழ், காலையில் கனத்த மழை பெய்யும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Related News