பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் நடந்துவரும் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தால் நாட்டின் நிலைமை மிக மோசமாக நிலைக்கு தள்ளப்படும் என மலேசிய பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கருத்து தெரிவித்துள்ளார். பெர்சத்து கட்சியைச் சேர்ந்த முகமட் ஃபாயிஸ் நா அமான் தனது முகநூல் பக்கத்தில் 126.. என்று எழுதி பதிவை வெளியிட்டு அரசியல் புதிர் போட தேவையில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.
இன்னொரு அரசியல் மாற்றத்தை நாடு ஏற்காது என்றும் அன்வார் தலைமைத்துவத்தின் கீழ் அண்டை நாடுகளுடனான உறவுகள் வலுபெற்று வருகின்றது என அவர் மேலும் கூறினார். மேலும், ஒரு அரசியல் மாற்றம் நிலவுமெனில் நாட்டின் பங்கு வர்த்தனை, பொருளாதாரம் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் வேலை செய்யும் உச்சாகம் என அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதை ஆட்சியைக் கவிழ்க நினைப்பவர்களில் கருத்தில் கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நடப்பு அரசாங்கம் நாட்டை மீட்கும் நோக்கத்தோடு செயல் கொண்டிருப்பதால் , முதலில் தங்களை வேலை செய்ய விடுமாறு பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கேட்டுக் கொண்டார்.








