Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வீடு புகுந்து கொள்ளை முயற்சி, ஐவரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீடு புகுந்து கொள்ளை முயற்சி, ஐவரை போலீஸ் தேடுகிறது

காஜாங், ஜூன்.16-

காஜாங் வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை வீடு புகுந்து கொள்ளையடிக்கு முயற்சியில் ஈடுபட்டது தொடர்பில் போலீசார் ஐவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை முயற்சி குறித்து அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து 66 வயது குத்தகையாளர் ஒருவர், அன்றிரவு 10.10 மணியளவில் போலீசில் புகார் அளித்து இருப்பதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த கறுப்பு ஆடையை அணிந்த ஐந்து நபர்கள், அந்த வீட்டிற்குள் நுழைவது ரகசிய கேமராவில் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →