Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இ-இன்வோய்ஸ் முறை ஒத்தி வைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இ-இன்வோய்ஸ் முறை ஒத்தி வைப்பு

ஜார்ஜ்டவுன், ஜூன்.08-

இ-இன்வோய்ஸ் முறை செயல்படுத்துவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக குறு, சிறு நடுத்தர நிறுவனங்களின் கவலைகளை அரசு கேட்டறிந்த பின்னரே இந்த ஒத்தி வைப்பு முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் நிறுவனங்கள் உள்நாட்டு வருவாய் வாரியம் வழங்கிய இ-இன்வோய்ஸ் அமைப்புடன் தங்களைச் சரி செய்து கொள்ள அவகாசம் கிடைக்கும்.

இந்த அமைப்பு வருடாந்திர வருமானம் 5 இலட்ச ரிங்கிட்டிற்கும் குறைவாக வியாபாரம் செய்யும் அல்லது வருவாய் ஈட்டுவோருக்கு இப்போதைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் 5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் இடைப்பட்ட வருமானம் ஈட்டுபவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →