May 22, 2026
Thisaigal NewsYouTube
ரயில் மோதியதில் வங்காளதேசிகள் மரணம்
தற்போதைய செய்திகள்

ரயில் மோதியதில் வங்காளதேசிகள் மரணம்

Share:

காஜாங், மார்ச் 4 -

காஜாங் , ஜாட் ஹில், தாமான் புன்சாக் உத்தாமா வில் ரயில் இருப்பு பாதையில் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும் மூன்று வங்காளதேசிகள் கொமுயுட்டர் ரயில் மோதி உயிரிழந்தனர்.

நேற்று இரவு 10:53 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

ரயில் இருப்பு பாதையில் அத்துமீறி நுழைந்த 30 முதல் 40 வயதிற்கு உட்பட்ட அந்த நபர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததாக அகமட் முக்லிஸ் விவரித்தார்.

இச்சம்பவத்தின் போது வெளிநாட்டு பிரஜைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாக அகமட் முக்லிஸ் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அகமட் முக்லிஸ் கூறினார்.

Related News