Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்
தற்போதைய செய்திகள்

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

Share:

ஹைனெகென் மார்க்கெட்டிங் ஆதரவில், ‘டைகர் எம்பவர்’ மற்றும் ‘மலர் டெய்லி’ இணைந்து நாவெம் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடத்திய டிஜிட்டல் மற்றும் AI தொழில்நுட்ப சிறப்பு பயிற்சியின் பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இப்பயிற்சியை அனுஷா வழிநடத்தினார். இதில் ஹைனெகென் வர்த்தகப் பிரிவின் நிர்வாகி ஜெனிபர் தெனாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வணிக மேம்பாடு குறித்த இப்பயிற்சியில், 'ஹெவன்லி பேக்கர்ஸ்' சந்திரிகா நாயுடு முதலிடம் பெற்று வெ.500 ரொக்கமும், 'சிந்தசிஸ் லெஷர் கஃபே' ரோகினி சிவலிங்கம் வெ.300 ரொக்கமும் பெற்றனர். இரண்டாம் இடத்திற்கு வெ.200 ரொக்கமும், மூன்றாம் இடத்தை நவீன விவசாயி ரவீந்திரனும் தட்டிச் சென்றனர். இவர்களுடன் குளிர்சாதன கைப்பெட்டி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வவுச்சர் வழங்கப்பட்டன.

முன்னாள் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பரிசுகளை வழங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு இதுபோன்ற AI பயிற்சிகள் மிக அவசியம் என்றார். ஹெய்னிகியனின் இந்த சமூக மேம்பாட்டுத் திட்டத்தை மலர் டெய்லி தலைமை நிர்வாகி டத்தோ எஸ்.எம். பெரியசாமி வெகுவாகப் பாராட்டினார்.

நிகழ்வில் ஃபார்டெக் செக்யூரிட்டி மலேசியா தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ அழகேசு, இயக்குனர் டத்தோ ஷாமிளா, டத்தோ மகேந்திரன், தொழிலதிபர் சிவா மற்றும் டத்தோ பஞ்ச மூர்த்தி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

Related News