Nov 20, 2025
Thisaigal NewsYouTube
சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு 42 குற்றச்செயல் பதிவுகள்
தற்போதைய செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு 42 குற்றச்செயல் பதிவுகள்

Share:

சிரம்பான், நவம்பர்.20-

சிரம்பான், செண்டாயானில் ஓர் உணவகத்தின் அருகில் பாராங்கினால் வெட்டுப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு 42 குற்றப்பதிவுகள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

கொள்ளையடித்தல், வீடு புகுந்து திருடுதல், மற்றவர்களுக்கு காயம் விளைவித்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் பதிவுகளை அந்நபர் கொண்டுள்ளதாக டத்தோ அல்ஸஃப்னி குறிப்பிட்டார்.

நேற்று இரவு 11 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில்33 வயதுடைய கொல்லப்பட்ட நபர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் செண்டாயானில் உள்ள ஓர் உணவகத்திற்கு உணவருந்த வந்துள்ளார்.

பின்னர் தனது கார் நிறுத்தப்பட்ட இடத்தை நோக்கி அந்த நபர் சென்ற போது, இரண்டு கார்களில் வந்த முகமூடி அணிந்த கும்பல், அவரை வழிமறித்துள்ளனர்.

அந்த கும்பலிடமிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர், சாலை வழியாக ஓடுவதற்கு முயற்சி செய்த போது துப்பாக்கியையும், பாராங்கையும் ஆயுதமாகக் கொண்ட அந்த கும்பல், அந்நபரை பாராங்கினால் வெட்டியதுடன், துப்பாக்கியால் சுட்டனர் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இன்று பிற்பகலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ அல்ஸஃப்னி தெரிவித்தார்.

கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த நபர் சாலையோரத்தில் புல்தரையில் விழுந்து உயிரிழந்தார். அந்நபரின் உடலை பரிசோதனை செய்த போது ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதுடன் துப்பாக்கிச் சூடுகளும் பாய்ந்துள்ளன.

இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் 302 மற்றும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ அல்ஸஃப்னி குறிப்பிட்டார்.

Related News