May 21, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிம்  நிறைய சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கலாம்
தற்போதைய செய்திகள்

துன் டாயிம் நிறைய சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கலாம்

Share:

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், நீண்ட கால முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன், தனக்கு சொந்தமான நிறைய சொத்து விவரங்களை அறிவிக்காமல் பதுக்கி வைத்து இருக்கலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் சந்தேகிக்கிறது.

தங்களின் சொத்து விவரங்களை முழுமையாக பிரகடன்படுத்தவில்லை என்று கூறி, துன் டாயிமும் அவரின் மனைவி தோ புவான் நய்மா அப்துல் காலிட்டும் அண்மையில் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

இவர்களில், துன் டாயிமிற்கு சொந்தமான நிறைய சொத்துக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று சந்தேகிகப்படுகிறது.

அந்த சொத்து விவரங்களை கோருவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு 87 வயதான அந்த முன்னாள் நிதி அமைச்சர் மீண்டும் அழைக்கப்படலாம் என்று அந்த ஆணையம் இன்று கோடி காட்டியுள்ளது.

Related News