May 22, 2026
Thisaigal NewsYouTube
மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் மூவர் உயிரிழந்தனர்

Share:

மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் புதிதாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன் வழி, இதுவரையில் அந்த புனித யாத்திரையில் உயிரிழந்த மலேசியர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளதாக, பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் செணட்டர் DATUK DR MOHD NA'IM BIN MOKHTAR தெரிவித்தார்.

65 முதல் 75 வயதுக்கு உட்பட்ட அம்மூவரில், இருவர் மாரடைப்பு காரணமாகவும் ஒருவர் குடல் புற்றுநோய் காரணமாகவும் உயிரிழந்ததாக MOHD NA'IM கூறினார்.

இவ்வேளையில், மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு செல்லும் மலேசிய யாத்ரீகர்கள், உடல்நல பாதிப்புக்கு இலக்கானால், அங்குள்ள மருத்துவ மையத்தில் சிகிச்சையளிக்கப்படுகின்றது.

பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அந்த மருத்துவ மையத்தில் 187 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அது தவிர, மலேசிய யாத்ரீகர்கள் தங்கியுள்ள 12 தங்குமிடங்களுக்காக, 17 AMBULANS-கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் MOHD NA'IM குறிப்பிட்டார்.

Related News