நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூச விழாவின் உண்டியல் பணம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் பினாங்கு, KOMTAR கட்டடம், Level 5, Ruang Legar என்ற இடத்தில் எண்ணப்படவிருக்கிறது. உண்டியல் பணம் எண்ணப்படும் நிகழ்வு அறவாரியத்தின் முகநூலில் நேரலை செய்யப்படும்.
உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு ஆர்வமுள்ள தன்னார்வாளர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், கீழ் கண்ட QR குறியீட்டின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.








