Jul 28, 2026
Thisaigal NewsYouTube
41 பேரிடம் சுமார் வெ.11 மில்லியன் சிண்டிகேட் மோசடி
தற்போதைய செய்திகள்

41 பேரிடம் சுமார் வெ.11 மில்லியன் சிண்டிகேட் மோசடி

Share:

கோலாலம்பூர், மே 03-

பிரபல முதலீட்டு நிறுவனமான Goldman Sachs -யை போன்று ஆள்மாறாட்டம் செய்து 41 பேரிடம் சுமார் 11.4 மில்லியன் வெள்ளியை மோசடி செய்த சிண்டிகேட் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சிலாங்கூர், ஜொகூர், நெகிரி செம்பிலான், பேராக், கெடா, பினாங்கு உட்பட சரவாக் ஆகிய இடங்களில் மேற்கொண்ட Operation Nuri 7/24 திடீர் சோதனையின் போது இத்தகைய செயல்களை புரியும் சிண்டிக்கேட்டுகள் முறியடிக்கப்பட்டதாக மத்திய வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யுசோப் தெரிவித்தார்.

இச்சோதனையின் போது 21க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரை சேர்ந்த 10 ஆண்கள் உட்பட 2 பெண்களும் கைது செய்யப்பட்டதாக ரம்லி முகமது கூறினார்.

பாதிக்கப்பட்ட 41 பேரிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிண்டிகேட்டுகள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்