சட்டவிரோத பண மாற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக தமக்கு எதிராக 6 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதிக்காக்கும் படி முன்னாள் பிரதமர் Tan Sri முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டுள்ளர்.
இது ஒரு கடுமையான காலக்கட்டம். ஆதரவாளர்கள் சட்டத்தைப் பின்பற்றி, அமைதிக்காக்க வேண்டிய நேரமாகும் என்று அவர் அறைக்கூவல் விடுத்துள்ளார். இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடமும் இறைவனிடமும் தாம் விட்டு விடுவதாக Perikatan Nasional கூட்டணி தலைவருமான முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.








