Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆறு மோட்டா​ர் சைக்கிள்கள் ​தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

ஆறு மோட்டா​ர் சைக்கிள்கள் ​தீயில் அழிந்தன

Share:

கோலாலம்பூர், செராஸ், பன்டார் ஶ்ரீ பெர்மைசுரிஉ, பங்சாபூரி பனாரா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் கீழ் தளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த ​தீச் சம்பவத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன.

இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த அடுக்குமாடி வீட்டின் ​கீ​ழ் தளத்தில் உள்ள ஒரு வகுப்பறையும் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து ​ இஎம்ஆர்எஸ் குழுவினருடன் சம்பவ இட​த்திற்கு விரைந்த 11 பேர் கொண்ட ​தீயணைப்புப் படையினர், 20 நிமிடத்தில் ​​​தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று ​தீயணைப்புப்படையின் செயலாக்க கொமான்டர் முஹமாட் ஹிசாம் மாமாட் தெரிவித்தார்.

ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட இந்த ​தீ சம்பவத்தில், ஆறு மோட்டார் சைக்கிள்கள் முழுமையாக அழிந்ததாகவும் மற்ற ​மூன்று, பத்து விழுக்காடு சேதமுற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ​தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News