Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அறிவுரை சொன்ன மூதாட்டி தாக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அறிவுரை சொன்ன மூதாட்டி தாக்கப்பட்டார்

Share:

மலாக்கா,ஜன.30
திறந்த வெளியில் குப்பைகளை இளைஞர் ஒருவர் எரிப்பதைக் கண்ட அண்டை வீட்டு மூதாட்டி ஒருவர், அவ்வாறு செய்யக் கூடாது என அறிவுரை செய்துள்ளார். அது பிடிக்காத அந்த 26 வயது இளைஞர் , 76 வயது அம்மூதாட்டியைத் தாக்கிய சம்பவம் நேறு, மலாக்கா தஞ்சோங் க்ளிங்கில் நிகழ்ந்தது.

தமது நிலத்தில் அந்த இளைஞர் குப்பைகளை எரிப்பதால், அதில் ஏற்படும் புகை அம்முதியவருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதாக பக்கத்து வீட்டு உரிமையாளரிடம் புகாரளித்துள்ளார் என மலாக்கா போலீஸ் தலைவர் க்ரிஸ்தோபர் பெதிட் தகவல் வெளியிட்டார்.

இந்தப் புகார் வாய்ச் சண்டையாக மாறியதோடு அம்மூதாட்டியை அந்த இளைஞர் சரமாறியாகத் தாக்கியுள்ளார். அங்கிருந்து தமது வீட்டிற்கு ஓடிய மூதாட்டி, போலீஸ் புகாரையும் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த இளைஞர் அன்றைய நாள் இரவு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்த 29 வினாடிகள் கொண்ட காணொளி வைரலானது.

Related News