அம்னோ தனது வலிமையையும், ஆதரவையும் பரிசோதித்துப் பார்த்துக் கொள்வதற்கு தனது சொந்த சின்னமான *கெரிஸ் கத்தியை பொதுத் தேர்தலுக்கான சின்னமாக பயன்படுத்துவது நியாயமான ஒன்றாகும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள், அம்னோவை நிராரித்து விட்டனர். இந்நிலையில் தனது பலத்தை மீட்டெடுப்பதற்கு அம்னோ தனது சொந்த சின்னமான கெரிஸ் கத்தியைப் பயன்படுத்துவது ஏற்புடைய செயலாகும் என்ற அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான தாஜுதீன் அப்துல் ரஹ்மான் பரிந்துரைத்துள்ளார்.
ஒவ்வொரு இனத்தவரும், கட்சியும் தனது சொந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தங்கள் நலன் சார்ந்த அம்சங்களை புகுத்துவது உண்டு. அந்த வகையில் *கெரிஸ் கத்தி, அம்னோவுடன் இரண்டறக் கலந்தது என்பதால் அச்சின்னத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை என்று முன்னாள் பாசீர் சாலாக் எம்.பி.மான தஜுடின் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, கிரீஸ் கத்தியை தேர்தல் சின்னமாக பயன்படுத்தவது குறித்து அம்னோ அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


