Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ரிலீஸுக்கு ரெடியாகும் இந்தியன்-2.. வைரலாகும் அப்டேட்
தற்போதைய செய்திகள்

ரிலீஸுக்கு ரெடியாகும் இந்தியன்-2.. வைரலாகும் அப்டேட்

Share:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி,

பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்.

இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Related News