Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாராங்கை ஏந்தியக்கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

பாராங்கை ஏந்தியக்கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Share:

கம்போங் மோரிப், மார்ச் 22.

இரண்டு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட ஓர் இந்திய ஆடவர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, சினிமா பாணியில் பாடல் பாடியவாறு மிரட்டும் தோரணையில் சென்ற காட்சியை கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த நபர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, பந்திங், ஜாலான் கம்போங் மோரிப் சாலையில் சென்ற சம்பவத்தை தொடர்ந்து, அந்நபர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அஹ்மத் ரித்வான் முஹம்மத் நோர் தெரிவித்தார்.

குடும்ப பிரச்னை காரணமாக அந்த நபர் வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு சென்றதாக நம்பப்படும் வேளையில் அவர் தற்போது 1958 ஆம் ஆண்டு அபாயரக ஆயுத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்