Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிண்டிகேட்டுகளால் ஆறு மாதங்கள் மோசடியில் சிக்கிய நபர் மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

சிண்டிகேட்டுகளால் ஆறு மாதங்கள் மோசடியில் சிக்கிய நபர் மீட்கப்பட்டார்

Share:

செப்பாங், மே 08-

நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை தருவதாக முகநூலில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்திற்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக மோசடியில் சிக்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

29 வயது லாவ் என்கிற அந்நபர் தாய்லாந்திலுள்ள ஒரு வங்கியில் மாதத்திற்கு 15,000 வெள்ளி சம்பளம் தருவதாக முகநூலில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தை கண்டு விண்ணப்பித்து பிறகு தாம் சிண்டிகேட்டுகளால் ஏமாற்றப்பட்டதாக புகார் கிடைக்கபெற்றதாக மலேசிய மனிதாபிமான அமைப்பின் பொதுச் செயலாளர் டத்தோ ஹிஷாமுதீன் ஹாஷிம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபரை தாய்லாந்தில் வேலை என்று கூறி மியன்மாருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவ்விடத்தில் அவர் கட்டாய தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் ஹிஷாமுதீன் ஹாஷிம் குறிப்பிட்டார்.

உணவு கொடுக்காமல், சிண்டிகேட்டுகளால் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 9,480 தொகையை பாதிக்கப்பட்டவர் செலுத்த உத்தரவிடப்பட்டதாக ஹிஷாமுதீன் ஹாஷிம் கூறினார்.

பிறகு, சம்பந்தப்பட்ட நபர் உட்பட அவருடன் மற்றொரு நபரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி எளிதில் ஏமாற வேண்டாம் என்று ஹிஷாமுதீன் ஹாஷிம் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து