Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூத்த மன்றமணிகள் கௌரவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூத்த மன்றமணிகள் கௌரவிக்கப்பட்டனர்

Share:

நாட்டில் அன்று துடிப்புடன் இயங்கி வந்த 200-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் மணிமன்றங்களின், இன்றைய நிலை, என்னவாயிற்று என்று, பிரபல ஊடகவியலாளரும் மணிமன்ற முன்னோடிகளில் ஒருவருமான பெரு.அ.தமிழ்மணி கேள்வி எழுப்பினார்.

பத்தாங் பெர்சுந்தை,மணிமன்றத்தின் மூத்த உறுப்பினர்களுடனான சந்திப்பு, அதன் முன்னாள்
தலைவர் பெ. திருமூர்த்தி தலைமையில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

100- க்கும் அதிகமான மூத்த மன்ற மணிகள் பங்கேற்ற இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட முனைவர் தமிழ்மணி, தொடர்ந்து தமது உரையில் "இன்றைக்கு, நமது
சமூகத்திலுள்ள அவலநிலையை அகற்ற, தமிழ் இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகும் என்றார்.

குறிப்பாக, தொடக்கக்காலத்தில் துடிப்புடன் இயங்கி வந்த தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் உறுப்பினர்களைப்போல மணிமன்றங்களின் பங்களிப்பு அவசியமாகிறது என்று தமிழ்மணி வலியுறுத்தினார்.

இன்றைய நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மன்றங்களின் பணி தீவிரமடைய வேண்டியுள்ளது. எனவே, அதைக்கவனத்தில் கொண்டு, மணிமன்றங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டுமென்று தமிழ்மணி அறைக்கூவல் விடுத்தார்.

பத்தாங் பெர்சுந்தை சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மன்ற மணிகளுக்கு மாலையும் பொன்னாடையும் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் திருவாளர்கள் நெல்சன் முருகன், இரா. மாசிலாமணி, சி ,மு.விந்தைக்குமரன், குயில் செல்வராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related News