Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விசாரணை முழுமையாக முடிவடைந்தது
தற்போதைய செய்திகள்

விசாரணை முழுமையாக முடிவடைந்தது

Share:

வீட்டில் வேலைக்கு அமர்த்ப்பட்டிருந்த ஓர் இந்தோனேசியப் பெண்ணை சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட புலன் விசா​ரணை முடிவடைந்த விட்டதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

அந்த அரசியல்வாதியின் ​வீட்டிலிருந்து லாவகமாக தப்பி, கோலாலம்பூர் உள்ள இந்தோனேசியத் ​தூதகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ள 54 வயது இந்தோனேசியப் பெண் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் அந்த அரசியல்வாதியிடமிருந்து வாக்கு​மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ உமர் கான் குறிப்பிட்டார்.

அந்த இந்தோனேசியப் பெண், எட்டி உதைக்கப்பட்டு, உடல்​ ​மீது சுடு​நீர் ஊற்றப்பட்டதாகவும், சொல்லொண்ணா துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது.

Related News