சிலாங்கூர், ஜூன் 04-
சிலாங்கூர், செர்டாங்-ங்கில் நேற்று முன்தினம், செர்டாங் போலீஸ் நிலையத்தின் வேலியின் மீது பூந்தொட்டியை வீசியதாக சந்தேகிக்கப்படும் இரு பதின்ம வயது பையன்களைப் போலீஸ் கைது செய்துள்ளது.
17 வயதுடைய அவ்விருவரும் நேற்று மாலை மணி 4 அளவில் செரி கெம்பாங்கன்-னிலுள்ள தாமான் செர்டாங் ஜெயா-வில் கைது செய்யப்பட்டதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அன்பழகன் தெரிவித்தார்.
அவ்விருவரில் ஒருவர் மாணவர்; மற்றொருவர் வேலை ஏதும் செய்யவில்லை. பூந்தொட்டியை வீசி, சதிநாச வேலையில் ஈடுபட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அவ்விருவரும் தடுப்புக்காவலிடப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என அன்பழகன் கூறினார்.
தலைகவசங்களை அணியாததை, போலீஸ் உறுப்பினர் ஒருவர் கண்டித்ததால், அதிருப்திக்குள்ளான அவ்விருவரும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்த பூந்தொட்டிகளை தூக்கியெறிந்ததாக கூறப்படுகின்றது.








