Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் யானை தாக்கி கடும் காயத்திற்கு இலக்கானார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் யானை தாக்கி கடும் காயத்திற்கு இலக்கானார்

Share:

கெரிக், ஏப்ரல் 12-

பேராக், கெரிக், பத்து 11-இல் உள்ள கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் நினைவிடத்திற்கு அருகே, ஆற்றோரத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்றிருந்த ஆடவரை, திடிரென வந்த யானை ஒன்று தாக்கியதில் அவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

நேற்று இரவு மணி 7 வாக்கில், வயிற்றுப்போக்கு காரணமாக அவர் அவ்விடம் சென்ற போது எதிர்பாராத அச்சம்பவம் நிகழ்ந்ததாக, பேராக் வனவிலங்கு பாதுகாப்பு துறை இயக்குநர் யூசோப் ஷாரிப் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, அப்பகுதியில் சுமார் 12 பேர் இருந்த நிலையில், அந்த யானை அவரை மட்டுமே தாக்கியுள்ளது.

யானையின் மிதிக்கு ஆளான பெல்டா பெர்சியா-வைச் சேர்ந்த அவ்வாடவருக்கு விலா எலும்பு, இடது கால் எலும்பு ஆகியவை முறிந்ததோடு, தலையில் ரத்த கசிவும் ஏற்பட்டதாக யூசோப் ஷாரிப் குறிப்பிட்டார்.

பின், அந்நபர் மேற்கட்ட சிகிச்சைக்காக ஈப்போ ராஜா பேரமைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, யூசோப் ஷாரிப் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்