கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் கனத்த மழையில் குவாந்தான் - சிகமாட் சாலையின் 73 ஆவது கிலோ மீட்டரில் சாலை புதையுண்டது. இதனைத் தொடர்ந்து அச் சாலை அனைத்து போக்குவரத்திற்கும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
சாலை சீரமைப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் அதிகாலை 1 மணி முதல் அந்த முதன்மை சாலை மூடப்பட்டுள்ளதாக பெக்கான் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகனமோட்டிகள் மாற்று சாலையாக Paloh Hinai - Jalan Batu Balik -Pekan அல்லது Jalan Segamat - Muadzam Shah -Leban Condong - Nenasi ஆகிய சாலைகளை பயன்படுத்த முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.








