May 22, 2026
Thisaigal NewsYouTube
இடைநிலைப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

இடைநிலைப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

Share:

ஈப்போ, கம்போங் சிமியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை இரண்டாம் படிவ மாணவியை மானப்பங்கம் செய்ததாக கூறப்படும் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவி, கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து 59 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யஹாயா ஹாஸான் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாத காலகட்டத்தில் 14 வயதுடைய அந்த மாணவியை சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஐந்து முறை மானபங்கள் செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியரை மிரட்டி பணம் பறித்து வந்ததாக நம்பப்படும் பாதுகாவலரான தந்தை ஒருவரும் கைது செய்யப்பபட்டுள்ளதாக ஏசிபி யஹாயா ஹாஸான் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த பெண்ணின் தந்தைக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஆசிரியர் கொடுத்த போலீஸ் புகார் அடிப்படையில் 50 வயதுடைய அந்த பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி யஹாயா ஹாஸான் குறிப்பிட்டார்.

Related News