Jul 28, 2026
Thisaigal NewsYouTube
செம்பனை எண்ணெய் கலக்கப்படவில்லை எனும் லேபிலை உடைய ஐஸ்கிரீம்-கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

செம்பனை எண்ணெய் கலக்கப்படவில்லை எனும் லேபிலை உடைய ஐஸ்கிரீம்-கள் பறிமுதல்

Share:

புத்ராஜெயா, மே 03-

நாட்டின் முதன்மை உற்பத்தி பொருளாக விளங்கும் செம்பனை எண்ணெய்க்கு எதிரான லேபில்-லையுடைய பல்சுவைகளிலான ஐஸ்கிரீம்-களை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினம் மீதான அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.

பொதுமக்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், நேற்று காலை மணி 11.45 அளவில், புத்ராஜெயா, PRESINT 3-லுள்ள பல்வகை கடை ஒன்றை சோதனையிட்ட போது, அவ்விவகாரம் அம்பலமானதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினம் மீதான அமைச்சர் அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.

செம்பனை எண்ணெய் கலக்கப்படவில்லை என்ற லேபில்-லை கொண்ட பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்-களின் மொத்த மதிப்பு 897 வெள்ளி 60 சென்னாகும்.

தற்போது, 2022ஆம் ஆண்டு செம்பனை எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சட்டத்தின் கீழ், அவ்விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு கூடிய பட்சம் 250 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 5 ஆண்டுகளுக்கு மேல்போகாத சிறைதண்டனை விதிக்கப்படலாம் என அமைச்சர் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்