Dec 4, 2025
Thisaigal NewsYouTube
36 தம்பதியரின் பதிவு திருமணம் நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

36 தம்பதியரின் பதிவு திருமணம் நடைபெற்றது

Share:

ஈப்போ, சின் வூ விளையாட்டு சங்க மண்டபத்தில் 36 புதுமணத் தம்பதியர் ஒரே நேரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இன்று செப்டம்பர் 9 ஆம் தேதியான 9/9 மிகுந்த அதிர்ஷ்டத்திற்குரிய எண்ணாக அவர்கள் கருதியதால் 36 தம்பதியர், இன்று மண வாழ்க்கையில் இணைந்தனர். திருமண தம்பதியர்களில் பெரும்பாலோர் வெள்ளை நிறை உடையில் காணப்பட்டனர்.

தாங்கள் பல ஆண்டு காலமாக காதலித்தப் பின்னரே இன்று மணமேடையை கண்டு இருப்பதாக குறிப்பிட்ட அவர்கள், ஒன்பது, ஒன்பது என்ற (9/9) எண், தங்களின் மண வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷம், இணக்கமான புரிந்துணவு மற்றும் ஆழமான அன்பைதான் அதிகமாக எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related News