Sep 7, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!
தற்போதைய செய்திகள்

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

Share:

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற 'கியர்-அப்' (GEAR-uP) 2026 ஆம் ஆண்டறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மலேசியாவின் பொருளாதாரம் 2024 இல் 5.2 சதவீதமாகவும், கடந்த ஆண்டு அதே அளவிலும் வளர்ந்த வேளையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். இதன் மூலம், நடப்பு ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.6 சதவீதத்தை எட்டியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மடானி பொருளாதாரக் கொள்கையின் கீழ் நிதி அமைச்சால் வழிநடத்தப்படும் 'கியர்-அப்' திட்டம், 2024 முதல் 2028 வரையிலான காலத்தில் 120 பில்லியன் ரிங்கிட் உள்நாட்டு முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அரசாங்கச் சார்பு முதலீட்டு நிறுவனங்களான GLC- யில் இத்தகைய ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் மூலம், நாட்டின் நிதி ஆதாரங்கள் பெருகி மக்கள் நேரடியாகப் பயனடைந்து வருவதாகவும் அமீர் ஹம்சா மேலும் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து