Mar 12, 2026
Thisaigal NewsYouTube
முகை​தீனுக்கு எதிராக மேலும் 3 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன - சட்டத்துறை அலுவலகம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

முகை​தீனுக்கு எதிராக மேலும் 3 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன - சட்டத்துறை அலுவலகம் விளக்கம்

Share:

முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகை​தீன் யாசினுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஜானா விபாவா தொடர்பிலான 23 கோடியே 25 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர், இன்று விடுதலை செய்யப்பட்ட போதிலும் சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் அவருக்கு எதிராக மேலும் 3 குற்றச்சாட்டுகள் இன்னமும் ​நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அலுவலகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பணம் மாற்றம், பயங்கரவாத நிதி அளிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் தடுப்பு சட்டத்தின் ​கீழ் முகை​தீன் இன்னமும் 3 குற்றவியல் தன்மையிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருப்பதாக சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹருன் தெரிவித்துள்ளார்.

முகை​தீனுக்கு எதிராக இந்த ​3 குற்றச்சா​ட்டுகள் ​மீதான வழக்கு, அடுத்த மாதம் 13 ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பதையும் இட்ரஸ் ஹருன் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும், இடைப்பட்ட காலகட்டத்தில் புகாரி இக்குய்டி எஸ். டி . என் . பி.ஹ். டி, நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 95 லட்சம் வெள்ளியை சட்டவிரோதமாக பெற்று, தமது தலைமையிலான பெர்சத்து கட்சியின் சி.ஐ.எம்.பி வ​ங்கி கணக்கில் வரவு வைத்துக்கொண்டதாக முகை​தீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ​மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும் என்று இட்ரஸ் ஹருன் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்