Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரம் தாக்கி 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு: முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு: முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

Share:

சபா மாநிலத்தின் கம்போங் வெஸ்டன், பியோ ஃபோர்ட் பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சோகச் சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, இனி இது போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உயிரிழந்த போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், அரச மலேசிய போலீஸ் படைக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் காக்க அவர்கள் ஆற்றிய சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும் என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய நிலையில், சாலையில் மூவர் உயிரிழந்த நிலையில் கிடந்த காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்