Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!
தற்போதைய செய்திகள்

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

Share:

மோண்ட் கியாரா பகுதியில் வெறும் 40 மீட்டர் நீளமுள்ள புதிய இருவழிச் சாலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜாலான் டூத்தா கியாரா மற்றும் ஜாலான் கியாரா 3 ஆகியவை நேரடியாக இணைக்கப்பட்டு, சொலாரிஸ் டூத்தாமாஸ், செகாம்பூட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி கிடைத்துள்ளது.

3 மில்லியன் ரிங்கிட் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை, போன் எஸ்டேட்ஸ் (Bon Estates) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் முழுமையாக அந்நிறுவனத்தின் நிதியுதவியால் கட்டப்பட்டுள்ளது.

அதிக அளவில் கட்டிடங்கள் அமைந்துள்ள இப்பகுதியில் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையை இந்தப் புதிய சாலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜாலான் டூத்தா கியாரா சாலை முட்டுச்சாலையாக இருந்ததால், புக்கிட் பெலாங்கி மற்றும் சொலாரிஸ் இடையே பயணிக்கும் வாகனங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்ததாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய இணைப்பு மூலம் வாகனங்கள் இடது அல்லது வலதுபுறம் திரும்பிச் செல்ல முடியும் என்றும், எதிர்புறத்திலிருந்து வரும் வாகனங்களும் நேரடியாகக் கடந்து செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் அப்பகுதி மக்களின் பயண நேரமும் போக்குவரத்து சிரமமும் பெரிதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை