Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது

Share:

கோலாலம்பூரிலிருந்து கேரள மாநிலம் கொச்சினை நோக்கிச் சென்ற Batik Air விமானம் ஒன்றில், அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த புதன்கிழமை இரவு கோலாலம்பூரிலிருந்து கொச்சின் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பாத்தேக் ஏர் விமானம் OD231-இல் பயணம் செய்த அவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இச்செயலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளையில், அவர் விமானத்தின் ஜன்னல் பகுதியை சேதப்படுத்தியதுடன், சக பயணிகளையும், விமானப் பணியாளர்களையும் மிரட்டியதாகவும் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானப் பணியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட அந்நபர், விமானம் கொச்சியில் தரையிறங்கியதும், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்