Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு
தற்போதைய செய்திகள்

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

Share:

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார், அடுத்த வாரம் நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டிற்குப் பிறகு தனது பொறுப்புகளிலிருந்து தற்காலிக விடுப்பு எடுக்க உள்ளார்.

நூருல் இசா, தனது பதவியிலிருந்து முழுமையாக விலகவே விருப்பம் தெரிவித்தார். இருப்பினும், அவர் தற்காலிகமாக விடுப்பில் செல்ல கட்சியின் மத்திய தலைமைத்துவம் அனுமதி அளித்துள்ளதாக பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நூருல் இசா விடுப்பில் இருக்கும் இடைப்பட்ட காலத்தில், கட்சியின் துணைத் தலைவர் பொறுப்புகளை பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கவனிப்பார். மற்றொரு உதவித் தலைவரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கட்சியின் தேர்தல் இயக்குநராக முழுப் பொறுப்பையும் ஏற்பார் என்று டத்தோஸ்ரீ பாஹ்மி குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து